Search This Blog

Monday, June 22, 2009

முஸ்லிம்களுக்கெதிரான அராஜகம்

 
----- Original Message -----
 

முஸ்லிம்களுக்கெதிரான இந்திய அராஜகம்

இஸ்லாத்தை பயங்கரவாதமாகவும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் காட்டுவதற்கு
அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும்
இவ்வேளையில் இந்தியாவும் இதில் தமக்குரிய பங்களிப்பை கச்சிதமாக செய்து
வருகின்றது.

இந்தியாவில் சில காலமாக ஏற்பட்டு வரும் கலகங்கள், வன்முறைச் சம்பவங்கள்,
குண்டு வெடிப்புகள் போன்ற பயங்கரவாத நிகழ்வுகளுக்கு இந்து தீவிரவாதிகளே
காரணம் என்று நன்கறிந்த பிறகும் இந்திய பொலிஸார் முஸ்லிம்கள் மீது
பழியைப் போட்டு அவர்களை பயங்கரவாதிகளாக காட்டுவதிலேயே கண்ணும்
கருத்துமாய் இருக்கின்றனர். இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கமும், இந்திய
ஜமாதே இஸ்லாமியும் எப்போதுமே இந்திய பொலிஸாரின் இலக்காய் இருந்துள்ளன.
இது சம்பந்தமாக அஜித்சஹி என்ற இந்திய ஊடகவியலாளர் திடுக்கிடும்படியான பல
அந்தரங்கங்களை அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளார். நூற்றுக்கணக்கான
அப்பாவி முஸ்லிம்கள் பொய்க்குற்றச்சாட்டுகளின் பேரில் இந்திய
சிறைக்கூடங்களில் எப்படியெல்லாம் துன்புறத்தல் அனுபவித்து வருகின்றார்கள்
என்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

சில காலமாக இந்தியாவில் இடம் பெற்றுவரும் தொடர்ச்சியான குண்டுவெடிப்பு
சம்பவங்களுக்குப் பின்னணியில்; இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (ளுஐஆஐ)
இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரில் இவ்வியக்கத்தைச் சேர்ந்த பலர்
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காகவும், வெளிக்கொணர்வதற்காகவும்
கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றார் ஊடகவியலாளர் அஜித்சஹி.

இந்த முயற்;சியின்போது இந்திய பொலிஸார் திட்டமிட்ட அடிப்படையில் அப்பாவி
முஸ்லிம் இளைஞர்களை சிக்க வைத்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகக்
காட்டுவதற்கு எத்தணிப்பதை அஜித்சஹி நன்கு உணர்ந்து கொண்டார். இது
சம்பந்தமாக அவர் தெஹெல்கா சஞ்சிகையில் தொடர் கட்டுரைகளையும் எழுதி
வந்தார். இதில் பல உண்மைத் தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து மேலும் விடயங்களை பெற்றுக் கொள்வதற்காக மற்றுமோர்
ஊடகவியலாளரான யோகிந்தர் சிக்கந் அஜித்சஹியை பேட்டி கண்டார்.
அப்பேட்டியின் முக்கிய விடயங்கள் இங்கே தரப்படுகின்றன.

கேள்வி: தடை செய்யப்பட்ட இயக்கமான இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம்
(ளுஐஆஐ) சம்பந்தமாக இவ்வளவு தீவிரமாக ஆராய்வதற்கு உங்களைத் தூண்டியது
எது?

பதில்: இந்தியாவில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு இந்திய
மாணவர் இஸ்லாமிய இயக்கத்தை சுட்டிக் காட்டுவது போன்ற செய்திகளை
அண்மைக்காலமாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டு வருவதைக் காண்கின்றோம்.
கடந்த  ஆறு மாத காலமாக நான் தெஹெல்கா சஞ்சிகையில் தொழில் பார்க்கிறேன்.
எனக்கு ஊடகத்துறையில் 20 வருட அனுபவமுண்டு. இந்தியன் எக்ஸ்பிரஸ்
பத்திரிகையில் தொழில் பார்த்த ஆரம்ப காலத்தில் அரச அமைச்சர்கள்,
அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள் பொலிஸார் கூறும் விடயங்களை அப்படியே
நம்பிவிடக் கூடாது என்பதைக் கற்றிருந்தேன்.
அரசுகள், ஜனநாயக அரசென்றாலென்ன? அடக்குமுறை அரசென்றால் என்ன? இது போன்ற
விடயங்களில் தாராளமாக பொய் கூறும். இது அரசியல்வாதிகளின் மரபணுக்கோளாறு.
ஒவ்வொரு சம்பவத்துக்கும் பொலிஸார் (ளுஐஆஐ) யை குற்றம் சாட்டுவதற்கு
பின்னணியில் ஏதோ ஒன்று உள்ளது என்று எனது அடிமனதில்
உறுத்திக்கொண்டேயிருந்தது. அரசும், அரச அதிகாரிகளும் கூறுபவற்றை அப்படியே
வெளியிடும் பத்திரிகையாளர்கள் மத்தியில் இதன் உண்மைத் தன்மையை
அறிந்துகொண்டு மக்களுக்கு உணர்த்த வேண்டியது ஓர் ஊடகவியலாளரின் கடமை
என்றுணர்ந்ததாலயே இதில் ஈடுபட்டேன்.

நான் இதற்காக முதலில் செய்தது என்னவெனில் ளுஐஆஐ சம்பந்தமான வழக்குகளை
கையாளும், டெல்லியில் உள்ள வழக்கறிஞரை தொடர்பு கொண்டேன். இவ்வழக்குகள்
சம்பந்தமான பல அடிப்படைத் தகவல்களை அவர் மூலம் பெற்றுக்கொள்ள முடிந்தது.

ஓர் அவசர நடவடிக்கையாகவே அரசு சிமியைத் தடை செய்தது. இந்த தடைக்கான,
உறுதியான காரணங்கள் எதனையும் அரசு முன்வைத்திருக்கவில்லை. எந்த
ஆதாரமுமில்லாத, சும்மா மேல் வாரியான குற்றச் சாட்டுகளே
சுமத்தப்பட்டிருந்தன. இது போன்ற சம்பவமொன்றை உதாரணத்துக்கு எடுத்துக்
காட்ட விரும்புகின்றேன்.சிமியின் செயல் திட்டங்களில் ஒன்றாக இஸ்லாமிய
பிரசாரம் இருப்பதுவும் அது தடைசெய்யப்படுவதற்கான பின்னணி காரணங்களில்
ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓர் இயக்கத்தை தடைசெய்வதற்கு இது எப்படி காரணமாய் அமைய முடியும்? சகல
மதத்தவர்களும்- இஸ்லாமியர் உட்பட-தம் மதத்தினை பிரசாரம் செய்யும்
உரிமையினை இந்திய அரசியல் யாப்பு வழங்கியுள்ளது.

தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் தடையை இரத்துச் செய்ய நீதிமன்றத்தைக் கோர
சட்டத்தில் இடமுண்டு. ஆயினும் அந்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தின்
அங்கத்தவர் ஒருவரால் மட்டுமே அந்த கோரிக்கையை விட முடியும் என்ற விதிமுறை
வேடிக்கையானது. தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றில் அங்கத்துவம் வகிப்பது
மூன்று வருட சிறைத் தண்டனைக்குரிய குற்றம் என்று இதே சட்டம்
குறிப்பிடுகின்றது. அப்படியிருக்க, யாராவது தடையை ரத்துசெய்யக் கோரி
நீதிமன்றம் செல்வார் என்று நினைக்கின்றீர்களா?

ஆகவே, இந்த செயற்பாடுகளுக்கு பின்னணியில் மர்மமாக ஏதோ மறைந்து கிடப்பதை
உணர்ந்தேன். எம்மில் பல ஊடகவியலாளர்கள் அரசு கூறுவதை அப்படியே
ஒப்புவித்துவிட்டு தம் கடமை முடிந்து விட்டதாக எண்ணிக் கொள்கின்றனர். இது
தவறு. எத்தனையோ அப்பாவிகள் பயங்கரவாதிகள் என்று பொய்யாகக் குற்றம்
சாட்டப்பட்டு சிறைகளில் வாடுகின்றனர். கூடுதலாக, அப்பாவி முஸ்லிம்
இளைஞர்கள் இப்படிப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையைத் தொடர
விடக்கூடாது. ஊடகவியலாளர்களான நாம் உண்மையை வெளிக்கொணர வேண்டும். அரசு
விரும்பாவிட்டாலும் அதுபற்றி மக்களுக்கு அறியத் தரவேண்டும். இது
ஊடகவியலார்களின் கடமை.

கேள்வி: அது சரி, இதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?
பதில்: சிமியின் தடை வழக்கினை கையாளும் வழக்கறிஞர் குலாமுடன் பல
இடங்களுக்குச் சென்றேன். திருவனந்தபுரம், பெங்களுர், ஹைதராபாத், சென்னை,
உடைப்பூர், போபால், ஒளரங்கபாத் மற்றும் மும்பாய்; போன்ற இடங்களைக்
குறிப்பிடலாம். அதுபோக பிவான்டி, அலஹாபாத் போன்ற இடங்களுக்கு எனது
சொந்தச் செலவில் சென்று பல சிமி உறுப்பினர்களை சந்தித்துள்ளேன். சிமியின்
செயற்பாடுகள் குறித்து இப்பிரதேச மக்களுடன் தொடர்பாடி அரசின்
குற்றச்சாட்டில் ஏதாவது உண்மை இருக்கின்றதா என்று அறிய முயன்றுள்ளேன்.
இதன்போது இந்திய பொலிஸார் நியாயமற்ற முறையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை
முஸ்லிம் இளைஞர் மீது சோடித்து, சம்பந்தப்படாத குண்டுவெடிப்புகளுக்கு
இவர்களை குற்றவாளிகளாக்கி  தடுப்புக் காவலில் அடைத்துள்ளதை அறிய
முடிந்தது.

இந்திய சட்டத்தின்படி, சட்டத்தின் அடிப்படையில் குற்றம்
நிரூபிக்கப்படும்வரை எவரும் குற்றவாளியல்ல. ஆனால் இது இந்திய
பொலிஸாரினால் தொடர்ந்தும் மீறப்படுகின்றது.

 நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை துன்புறத்தி குற்றங்களுக்கு
ஒப்புதல் வாக்குமூலம் பெறுகின்றனர்.
இது போன்ற எந்த ஒரு வழக்கிலும் சிமி அங்கத்தவர் சம்பந்தப்பட்டதாக
ஆதாரத்துடன் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஆகவே இவ்வழக்குகளில் எந்த நியாய
அடிப்படையும் கிடையாது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் பொலிஸார் இவ்விளைஞர்களிடம் ஒப்புதல்
வாக்கு மூலங்கள் பெற்றுள்ளனர். இவ்வாக்குமூலங்கள் எப்படி பெறப்பட்டன
என்பதை நாம் அறிவோம். சாட்டப்பட்ட குற்றங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம்
பெறுவதற்கு கொடூரமான பல சித்திரவதை வழிமுறைகளை இந்திய பொலிஸார் கையாள்வது
ரகசியமான விடயமல்ல.
சுமார் நூறு வருடங்களுக்கு முன் பிரிட்டிஷாரால் இயற்றப்பட்ட சாட்சிகள்
சட்டத்தின்படி பொலிஸாரால் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் சட்டத்தின்
முன் செல்லுபடியற்றதாகும். பொலிஸார்ஒப்புதல் வாக்குமூலம் பெறும் முறையினை
பிரிட்டிஷ் அதிகாரிகள் நன்கு அறிந்து வைத்திருந்தனர் என்பதால் நீதிவான்
முன்னிலையில் அளிக்கப்படும் வாக்குமூலமே சட்டத்தின் முன் செல்லுபடியாகும்
என்ற ஏற்பாட்டை செய்திருந்தனர்.
ஆயினும் இன்று என்ன நடைபெறுகிறது? தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில்
பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில்
நிறுத்தப்படாது மாதக்கணக்கில் தடுப்புக்காவலில் வைக்கப்படுகின்றனர்.
இக்கால கட்டத்தில் பொலிஸார் இவர்களுக்கு இளைக்கும் துன்புறுத்தல்
பயங்கரமானது, மிருகத்தனமானது.

கேள்வி: இதற்கான காரணம் என்னவென்று நினைக்கின்றீர்கள். அதனைப்பற்றி
ஏதாவது கூற முடியுமா?

பதில்: நிச்சயமாக இது முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை
ஏற்படுத்துவதற்காகவும், முஸ்லிம்களுக்கு உரிய இடம்
கொடுக்கப்படாதிருப்பதற்கு காரணம் கற்பிக்கவும் அவர்களுக்குரிய கௌரவத்தை
மறுப்பதற்காகவும் என்று கூறலாம்.

கேள்வி: உங்கள் கருத்துப்படி இந்த சம்பவங்களுக்கு யார் பொறுப்பு கூற வேண்டும்?

பதில்: கடந்த ஐம்பது வருட கால பதிவுகளைப் பாருங்கள். பொலிஸார் எத்தனையோ
அப்பாவிகளை பயங்கரவாதிகள் என்று பொய்யாக குற்றம் சாட்டி கொன்றுள்ளதை
அறிவீர்கள்.

கேள்வி: முஸ்லிம் இளைஞர்கள்- சிமி அங்கத்தவர் உட்பட குற்றச்செயல்களில்
ஈடுபட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அது மட்டுமல்லாமல்,
சிமியின் இஸ்லாம் மத சார்பு கொள்கை, உலக கிலாபத் ஆட்சிக்கான அவர்களின்
செயல்பாடு மற்றும் இது சம்பந்தமாக அவர்கள் மேற்கொள்ளும் பிரசாரம்
பிரச்சினைக்குரியது என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

பதில்: ஒரு இந்திய பிரஜை இந்துமதம் சார்ந்தவனாகவோ, கிறிஸ்தவ மதம்
சார்ந்தவனாகவோ, இஸ்லாம் மதம் சார்ந்தவனாகவோ அல்லது எம்மதத்தையும்
சாராதவனாகவோ இருக்கும் உரிமையை இந்திய அரசியல் யாப்பு வழங்கியுள்ளது.
அப்படியிருக்க, அது எப்படி குற்றமாகும்?

நான் ஓர் இந்து. பகவத் கீதை இறைவனால் அருளப்பட்டது என்று உறுதியாக
நம்பும் அதேவேளை, மனிதனால் இயற்றப்பட்ட இந்திய அரசியல் யாப்பைவிட  அது
மேலானது என்றும் நம்புகின்றேன். இறைவனின் வார்த்தைகள் மனிதனின்
வார்த்தைகளைவிட உயர்வானது என்று கூறும் உரிமை எனக்கில்லையா? ஒருவன்
அப்படிக்கூறும்பட்சத்தில் அவனை தண்டிப்பது நியாயமாகுமா? எனக்கிருக்கும்
இந்த உரிமை எம் சகோதர முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது என்பதை
ஏற்றுக்கொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை இந்துக்களும், முஸ்லிம்களும் இந்தியாவின் இரு
கண்களாகும். அதில் ஒன்று இல்லையெனில் இந்தியாவின் உயிர் மூச்சு
அடங்கிவிடும். எம்மில் ஒரு சில இந்து வெறியர்கள் நாடு முற்று முழுதும்
இந்துத்துவமடைய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர். அப்படி நடக்கும்
நாளில் இந்தியா இருக்காது என்பதை உணர வேண்டும்.

நான் ஒருபோதும் முஸ்லிமாக மாற மாட்டேன். நான் ஓர் இந்துவாகவே மரணிப்பேன்.
நான் என் மதத்தில் ப+ரண நம்பிக்கை வைத்துள்ளேன். என் மத தர்மம்
சத்தியத்தின் பக்கம் இருக்கும்படி போதிக்கின்றது. முஸ்லிம்கள் எமது சகோதர
இனம். அவர்களுக்கு எதிராக அரசினாலும், பொலிஸாரினாலும் பரப்பப்படும் நச்சு
கருத்துக்களையும் தீய பிரசாரத்தையும் அவர்கள் மீது குத்தப்படும்
பயங்கரவாத முத்திரையினையும் ஓர் இந்துவான நான் இந்த தர்மத்தின்
அடிப்படையில் அடியோடு வெறுக்கின்றேன்.

நான் ஒரு சமூகசேவையாளனல்ல. நான் ஒரு சாதாரண ஊடகவியலாளன். இந்திய மாணவர்
இஸ்லாமிய இயக்கத்துக்கு எதிராக இந்திய அரசும் பொலிஸாரும்
கட்டவிழ்த்துவிட்டுள்ள பொய் பிரசாரங்களை வெளிச்சம் போட்டு காட்டக்
கிடைத்தது எனக்கு நிறைந்த மனமகிழ்ச்சியை அளிக்கின்றது.

நான் கற்ற ஊடகவியல் குரலற்றவரின் குரலாய் ஓர் ஊடகவியலாளன் இருக்க
வேண்டும் என்று சொல்லித் தந்தது. தர்மத்தை பின்பற்றும்படி  நான்
பின்பற்றும் இந்துமதம் போதிக்கின்றது. 42 வயதான நான் இதுவரை பணம் பணம்
என்று அலைந்ததுண்டு. அப்பாவிகளுக்காக குரலெழுப்பிய இந்த சிறுகாலம் என்
பிறவிப் பயனை அடைந்து விட்டது போன்ற ஓர் உணர்வை என்னுள்
ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி: ஊடகவியலாளருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
பதில்: எல்லா ஊடகவியலாளர்களும் உண்மையை ஆராய்ந்தறிய வேண்டும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். நாம் உண்மையைச் சொல்ல வேண்டு;ம். அரசும்
அதன் இயந்திரங்களும் கட்டவிழ்த்துவிடும் பொய்களை இனம் காண வேண்டும்.
அத்தோடு மக்களுக்கு அவற்றை இனம் காட்டவும் வேண்டும். இது ஓர்
ஊடகவியலாளரின் தலையாய பணி.

கேள்வி: பொய்க் குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் முஸ்லிம் இளைஞர்கள்
பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு தடுப்பு காவலில் வைத்து
தண்டிக்கப்படுவதை சந்தேகமில்லாது விளக்கினீர்கள். இதுபோன்ற
சந்தர்ப்பங்களில் இவர்கள் எவ்வாறு சட்டத்தில் நம்பிக்கை வைப்பர்?

பதில்: இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்த நாட்டில் சட்டத்தின்
மூலம் நியாயம் பெறலாம் என்ற நம்பிக்கை அற்றுப் போயுள்ளது. நீதித்துறையின்
மூலம் நியாயம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை.

பெங்க@ரில் ஒரு நீதவான், நான் அவரை பேட்டி கண்டபோது, ஒரு நபரிடம் ஓர்
அமெரிக்க டொலர் இருந்ததைக் கொண்டு அவருக்கு வெளிநாட்டுத் தொடர்பு
இருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். என்ன அநியாயம் இது.
இதனை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. நிலைமைகளை
நோக்கும் போது இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது என்றே
தோன்றுகிறது.

இது போன்ற ஒரு கால கட்டத்தில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்து சோர்ந்து
போய்விடக்கூடாது என்று கூற விரும்புகின்றேன். அரச அடக்கு முறைக்கு எதிராக
ஒன்றுபட்டு சாத்வீக ரீதியில் போராட்டத்தை தொடர வேண்டும். அதர்மத்துக்கு
எதிரான போராட்டங்களை நாம் சரித்திரத்தில் நிறையவே காண்கின்றோம்.
முஸ்லிம்களும் அதனை செய்ய வேண்டும், செய்வார்கள். மதத்தால் வேறுபட்டாலும்
அவர் பக்க நியாயத்துக்காக போராட என் போன்ற பலர் சமூகத்தில் இருக்கவே
செய்கின்றார்கள்.

தாஹா எம் முஸ்ஸமில்.

No comments:

Six C's of Character - Yasir Fazaga