Search This Blog

Wednesday, January 09, 2008

வால் மார்ட்:மலிவு விலையில் மரணம்!

வால் மார்ட்:மலிவு விலையில் மரணம்!
எதிர்ப்புகளை மீறி கள்ளத்தனமாக இந்தியாவின் உள்ளே நுழைந்து விட்டது வால்மார்ட். சில்லறை வணிகத்தில் நுழைய முடியாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாயிற்கதவைச் சாத்தியிருப்பது போல பாவ்லா காட்டிவிட்டு, கொல்லைப்புறம் வழியாக வால்மார்ட்டை உள்ளே அழைத்து வந்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு.
வால் மார்ட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக ஏர்டெல் நிறுவனத்தின் முதலாளி ராஜன் பாரதி மிட்டல் சென்ற மாதம் அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்படி பாரதி நிறுவனம் தனக்குத் தேவையான பொருட்களை வால்மார்ட்டிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளும். அரிசி பருப்பு முதல் அனைத்துப் பொருட்கள் மீதும் வால் மார்ட் என்ற முத்திரை (பிராண்டு) இருக்கும். பொருள் கொள்முதல், வணிக நிர்வாகம் ஆகிய அனைத்தையும் திரைமறைவில் வால்மார்ட் நடத்தும். ஆனால் கடையின் பெயர் மட்டும் வால் மார்ட் என்று இருக்காது. கடைக்கு வேறு பெயர் வைத்துக் கொண்டு, வால்மார்ட்டின் முகவராக பாரதி நிறுவனம் இயங்கும்.
இந்த கள்ளத்தனமான ஏற்பாட்டுக்கு உதவும் வகையில் சில்லறை வணிகம் குறித்த தனது கொள்கையை திட்டமிட்டே வடிவமைத்திருக்கிறது காங்கிரசு அரசு. ஏகாதிபத்தியங்கள் பல இருந்தாலும் அவற்றின் தலைவனாகவும் மேலாதிக்கச் சக்தியாகவும் அமெரிக்கா இருப்பதைப் போல, சில்லறை வணிகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும், வால்மார்ட் அவை அனைத்துக்கும் மேலான ஒரு பயங்கரமான அழிவுச் சக்தி. அமெரிக்க இராணுவம் நடத்தும் ஆக்கிரமிப்புப் போருக்கும் வால்மார்ட் தொடுக்கும் வர்த்தகப் போருக்கும் பெரிய வேறுபாடு கிடையாது — துப்பாக்கி ஒன்றைத் தவிர.
அமெரிக்க மேலாதிக்கத்திற்க்கும் வால்மார்ட்டுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவைப் புரிந்து கொள்ள உதவும் சமீபத்திய உதாரணம் ஒன்று இருக்கிறது. அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்கு மன்மோகன் சிங் நியமித்த தூதர்களில் முக்கியமானவர் வால்மார்ட்டின் இந்தியக் கூட்டாளியான மிட்டல். சில்லறை வணிகத்திற்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்திற்கும் உள்ள தொடர்புதான் வால்மார்ட்டுக்கும் மறுகாலனியாக்கத்திற்கும் உள்ள தொடர்பு.
மலிவு விலை என்பதுதான் மக்களை வீழ்த்த வால்மார்ட் ஏந்தியிருக்கும் ஆயுதம். இந்த ஆயுதத்தின் மூலம் உலக மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், பண்பாடு முதல் அவர்களுடய அரசியல் கருத்துகள் வரை அனைத்தையும் மாற்றுகிற வால்மார்ட். நுகர்தலே மகிழ்ச்சி, நுகர்தலே வாழ்க்கை, நுகர்தலே இலட்சியம் என்று அமெரிக்க சமூகத்தையே வளைத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது வால்மார்ட். அதற்குப் பலியான அமெரிக்க மக்கள், தம் இரத்தத்தில் ஊறி சிந்தøனøயயும் செரித்து விட்ட வால்மார்ட் எனும் இந்த நச்சுக் கிருமியிடமிருந்து விடுபடமுடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் உடலுக்குள் நுழைந்து விட்டது அந்த நச்சுக்கிருமி. இதனை எதிர்த்த போராட்டம் நீண்டது, நெடியது. அந்தக் கிருமியின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது இந்த தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த்துப் போராடவும் உதவும். ···இரண்டாம் உலகப்போரில் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சாம் வால்டன், அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாநிலத்தின் ரோஜர்ஸில் வாங்கிய தள்ளுபடி விற்பனைக் கடைதான் வால்மார்ட். துவக்க காலத்தில் மற்ற பலசரக்குக் கடைகளில் விற்கப்படாத மிக மலிவான பொருட்களும், மற்ற கடைகளில் விற்கப்படும் பொருட்களை சந்தை விலையை விட மலிவாகவும் விற்றது வால்மார்ட்.
உறுதியாக நட்டம் விளைவிக்கக் கூடிய இந்த வியாபார உத்தியை மேற்கொள்ள சாம்வால்டன் இரண்டு வழிமுறைகளைக் கையாண்டார். ஒன்று, ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம், இரண்டாவது, உற்பத்தியாளர்களிடம் குறைவான விலையில் சரக்கெடுப்பது. இந்தக் கொள்øககள் காரணமாக வால்மார்டின் வளர்ச்சி மெதுவாக இருப்பினும் 1969ம் ஆண்டுக்குள் 31 மில்லியன் டாலர் ஆண்டு வருமானத்துடன் தன் முதல் கடைக்கு 200 மைல் சுற்றளவிற்குள்ளாகவே 32 கடைகளைத் திறந்தார் சாம் வால்டன்.
இந்த வணிகமுøறயினால் வருமானத்தை மீறிய கடன்பட்ட சாம் வால்டன், தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதிரடியாக மேலும் பல கடைகளை திறந்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து பல வங்கிகளிடம் கடன் கோரினார். வங்கிகள் சாம் கோரியது போல் அல்லாமல் கடனுக்கு வரம்பு விதித்தனர். வங்கிகளை நம்பிப் பயனில்லை என உணர்ந்த சாம் பங்குச் சந்தையின் உதவியை நாடினார். அமெரிக்காவின் அந்நாளைய சட்டப்படி எந்த ஒரு நிறுவனமும் முதல்முறை (ஐகO) நேரடியாக தன் பங்குகளை விற்க முடியாது, வேறொரு நிதி நிறுவனத்தின் மூலமாக மட்டுமே பங்குகளை விற்க முடியும்.
இந்தப் பணிக்கு சாம் இரண்டு பெரும் கிரிமினல் வங்கிகளை தனக்காக அமர்த்தினார். ஒன்று, அமெரிக்க உளவுத்துறையின் அடியாளாக அறியப்பட்டு, ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தலுக்காக 1990இல் தண்டிக்கப்பட்ட அர்கன்ஸாஸின் ஸ்டீபன்ஸ் வங்கி. மற்றொன்று, ஆங்கிலேய அரசுக்கு கைக்கூலியாக இருந்து, அமெரிக்கப் புரட்சிக்கு துரோகமிழத்த பாஸ்டன் தேசிய வங்கி. பின்னாளில் ஒயிட்வெல்ட் ஸ்விஸ் கடன் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த வங்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் நிதி ஊழலுக்காகவும் 1985இல் தண்டிக்கப்பட்டது.
இந்த இரண்டு கிரிமினல் வங்கிகளும் 1970இல் 4.5 மில்லியன் டாலர் பணத்தை சாம் வால்டனுக்குப் பங்குச் சந்தை மூலமாகப் பெற்றுத் தந்தனர். இதற்குப் பிரதி உபகாரமாக கிரிமினல் பேர்வழி ஸ்டிபன்ஸை வால்மார்டின் ஒரு இயக்குனராக்கினார் சாம் வால்டன்.
70களில் பங்குச் சந்øதயின் உதவியை நாடியது வால்மார்ட். 80களிலோ நாப்தா, எஃப்.டி.ஏ.ஏ போன்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் தென் அமெரிக்க நாடுகளையும் கனடாவையும் ஊடுருவ வால்மார்டின் உதவி அமெரிக்கப் பங்குச் சந்øதக்குத் தேவைப்பட்டது. வால்மார்ட் தயாராக இருந்தது.உலகமயமாக்கம் வால்மார்ட்டின் அசுர வளர்ச்சிதகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தொடர்ந்து அத்துøறயில் கொள்ளை இலாபமீட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்க முதலாளிகள் தம் மூலதனத்தை உற்பத்தித் துறையிலிருந்து அதற்கு மாற்றினர். அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களை மலிவான ஊதியத்தில் உற்பத்தி செய்து தரும் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்தது. பல அமெரிக்க உற்பத்தித் தொழில்கள் அழிந்தன. தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஏழை நாடுகளின் கொத்தடிமைக் கூடாரங்களில் உருவாக்கப்படும் மலிவு விலை பொருட்களை நுகரும் சமூகமாக அமெரிக்கா மாறியது.
இத்தகைய பொருட்களை அமெரிக்காவெங்கும் விற்பனை செய்யும் ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக வால்மார்ட் உருவாகியிருந்தது. அமெரிக்காவின் மற்ற உற்பத்தியாளர்களும் பெருவணிகர்களும் வால்மார்டின் குறைந்த விலை கொள்முதலுக்கு அடிபணியாவிட்டால் அழிந்து விடக்கூடிய நிலைக்கு அமெரிக்காவின் பல தொழில்களை மாற்றியிருந்தது வால்மார்ட். வால்மார்ட்டை உலகமயமாக்கலின் சிறந்த ஆயுதமாகக் கண்டு கொண்ட அமெரிக்க பங்குச் சந்தை, வால்மார்ட்டிற்கு பணத்தை வாரியிறைத்தது. வால்மார்ட் வெறித்தனமாக வளர்ந்தது.
80களின் இறுதி வரை 70,000 சதுரஅடி பரப்பிலான பிரம்மாண்டமான கடைகளை நடத்தி வந்தது. (மற்ற அமெரிக்கப் பெருவணிகக் கடைகளின் சராசரி அளவு 40,000 சதுர அடி). போட்டியாளர்களை அழிக்க ஆணி முதல் உணவு வரை 1,20,000 பொருட்களை விற்கும் 2,00,000 சதுரஅடி பரப்பிலான (4 கால்பந்து மைதானம் அளவில்) சூப்பர் சென்டர்களை 1987 முதல் வால் மார்ட் நிறுவனம் துவங்கியது.
1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட் அடுத்த 12 ஆண்டுகளில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி 25,000% வளர்ச்சியøடந்தது. இதே காலகட்டத்தில்தான் உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது.
1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட் இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, கோஸ்டாரிகா, சீனா, எல்சால்வடார், ஜெர்மனி, குவாதிமாலா, ஹோன்டுராஸ், ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, போர்டோரிகோ மற்றும் பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பலநாடுகளில் சில்லறை வணிகத்தில் முதல் இடத்தில் இருக்கிறது.
வளர்ச்சியின் மர்மம்
வால்மார்டின் இந்த அசுரத்தனமான வளர்ச்சிக்கும் அமெரிக்க ஏகபோகங்கள் ஏழை நாடுகளை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொண்டு அழித்து வருவதற்குமான உறவு தற்செயலானதல்ல. இத்தனை ஆயிரம் கடைகளைக் கட்டத் தேவையான பல லட்சம் கோடி டாலர்கள், வரிச்சலுகைகளாகவும், இன்றைய தேதியில் வால்மார்டின் கடன் எத்தனை லட்சம் கோடி என்று வெளியே தெரியாத அளவிற்கு கடன் பத்திரங்களாகவும் உலகின் முன்னணி வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளில் மறைந்துள்ளன.
இந்த வால்மார்ட் சாம்ராஜ்ஜியம் உலகம் முழுவதிலிருந்தும் உறிஞ்சும் பல லட்சம் கோடி டாலர்களும் நிறுவனத்தின் பங்குகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வைத்திருக்கும் சாம் வால்டனின் குடும்பத்தின் வயிற்றுக்குள் செல்கிறது. லாப ஈவுத்தொகை (Dividend) மூலமாக மட்டும் ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர்களைக் கொள்ளையடிக்கும் சாம் வால்டன் குடும்பத்தினர் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் வரிசையில் 5 முதல் 9 இடம் வரை நிரம்பியுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பைக் கூட்டினால் உலகின் நிரந்தரப் பணக்காரக் குடும்பமே இவர்கள்தான்.
உலக அரசியலின் படுபிற்போக்கு சக்திகளான புஷ், டிக் செனி வகையறாக்களுக்கு சாம் வால்டன் குடும்பம்தான் நிரந்தரப் புரவலர்கள். அமெரிக்காவில் கல்வியை முற்றிலுமாகத் தனியார்மயமாக்குவதற்குத் தீவிரமாக முயலும் கும்பல்களுக்கும் தலையாய புரவலராக இருப்பதுடன், பின்தங்கிய நாடுகளை அதன் பிடியில் வைத்திருக்கும் பல அரசுசாரா நிறுவனங்களையும் வால்டன் குடும்பம் பராமரித்து வருகிறது.
உலகமயமாக்கல் கொள்ளைக்காகத் திட்டமிட்டே வளர்க்கப்பட்ட வால்மார்ட் இன்று 6100 கடைகள், 18 லட்சம் ஊழியர்கள், ஆண்டு விற்பனை 312.4 பில்லியன், லாபம் மட்டும் 11.2 பில்லியன் என உலகத்தின் மிகப் பெரிய கம்பெனியாகியுள்ளது. 42 மணி நேரத்திற்கு ஒரு புதிய கடை என திறந்த வண்ணம் உள்ளது. வால்மார்ட் ஒரு நாடாக இருந்திருந்தால் உலகின் 21வது பணக்கார நாடாக இருந்திருக்கும். இதன் ஆண்டு வருமானம் பல ஏழை நாடுகளின் வருமானத்தை விடவும் அதிகம்.
ஏகபோகத்தின் வீச்சு
வாரத்திற்கு 10 கோடி அமெரிக்கர்கள் வால்மார்ட்டின் கடைகளில் பொருட்கள் வாங்குகின்றனர்.
அமெரிக்காவின் மொத்த பலசரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் 35%, மொத்த மருந்து மாத்திரை சந்øதயில் 25%, வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகளில் ஏறத்தாழ 40%, ஆடியோ வீடியோ விற்பனையில் 25%என்று அமெரிக்கச் சந்தையையே தனது கோரப்பிடிக்குள் கைப்பற்றி வைத்திருக்கிறது வால்மார்ட். அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித் தாள் விற்பøனயாளரும் வால் மார்ட் தான். வெளிவரும் பத்திரிகைகளில் ஏறத்தாழ 20% வால்மார்ட் மூலம் விற்பனையாகிறது. அமெரிக்கச் சந்øதயில் இப்படியென்றால் மெக்ஸிகோ போன்ற நாடுகளின் மொத்தச் சந்øதயில் 50% வால்மார்ட்டின் கையில் இருக்கிறது.அதேபோல பிரொக்டர் அண்ட் காம்பிள் (விக்ஸ் கம்பெனி), வீவைஸ் (ஜீன்ஸ் கம்பெனி), ரெவ்லான் (அழகு சாதனங்கள்) போன்ற பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது பொருட்களில் 20% 40% வரை வால்மார்ட் மூலமாகவே விற்பனை செய்கின்றன.
இத்தகைய ஏகபோகத்தின் மூலம் உற்பத்தியாளர்களைத் தன்னை அண்டிப் பழக்கும் அடிமைகளாகவே மாற்றியிருக்கிறது வால்மார்ட். தன்னுடன் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களையே ஆட்டிப் படைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னால் தமது பொருட்களின் விற்பனை விலை என்ன என்பதை பல பன்னாட்டு நிறுவனங்கள் வால்மார்டிற்குச் சொல்லி வந்தன. இன்றோ சந்தையைத் தன் பிடியில் வைத்திருக்கும் வால்மார்ட், தான் சொல்கிற பொருளை, கோருகிற விலையில் இந்நிறுவனங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செலுத்துகிறது.
வால்மார்டிற்குப் பிடிக்கவில்லையா, பத்திரிக்øகயின் அட்டை வடிவமைப்பு மாற்றப்பட வேண்டும், வால்மார்ட் ஆட்சேபித்தால் காசெட்டின் பாடல் வரிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். வால்மார்ட் கோரினால் பொருட்களின் நிறத்தை மாற்ற வேண்டும். விலையைக் குறைக்கும் பொருட்டு உற்பத்திப் பொருளின் தரத்தைக் குறைக்கச் சொன்னால் அதையும் செய்யவேண்டும். அமெரிக்க மக்களின் தலைவலி காய்ச்சலுக்கான மாத்திரையை முடிவு செய்வது கூட வால்மார்ட்தான்.
தனது ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வால்மார்ட் விற்பனை செய்யாது. அதே போன்ற வேறு நிறுவனத்தின் பொருட்கள் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.
ஏற்öகனவே சீனாவிலிருந்து அமெரிக்கா செய்து வரும் இறக்குமதியில் 15%க்கு மேல் வால்மார்டின் பங்கு தான். பிரிட்டனும் ரஷ்யாவும் பல்வேறு வெளி நாடுகளிலிருந்து செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பைக் காட்டிலும் வால்மார்ட் செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பு அதிகம்.
உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல்
ஒவ்வொரு நாளும் பென்டான்வில் எனப்படும் வால்மார்ட்டின் தலைøமயகத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து உற்பத்தியாளர்கள் படையெடுக்கிறார்கள். அவர்களை இனவாரியாகப் பிரித்து தனியøறகளில் அமர்த்தி வால்மார்ட் தலைகீழ் ஏலத்தைத் துவங்குகிறது.
அதாவது, யார் மிகக் குறைவான விலையைக் கூறுகிறார்களோ அவர்களுக்கே அவ்வாண்டு ஒப்பந்தம். மீண்டும் அடுத்த ஆண்டு சென்ற ஆண்டின் விலையை விடக் குறைத்துக் கொடுக்க அந்நிறுவனங்கள் நிர்பந்திக்கப்படும். கச்சாப் பொருட்களின் விலையேற்றம், ஊழியர்களின் ஊதிய உயர்வு என அந்நிறுவனங்கள் மறுத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக ஏலம் துவங்கும். வால்மார்டின் மூலமாக இந்நிறுவனங்களின் வியாபாரம் பன்மடங்கு அதிகரித்தாலும், கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவினால் பல நிறுவனங்கள் திவாலாகின்றன. அல்லது அமெரிக்காவில் ஆலைகளை மூடிவிட்டு, உற்பத்தியை சீனா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாற்றியிருக்கின்றனர்.
அமெரிக்காவின் ஐந்து பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் எலக்டிரிகல்ஸ், வால்மார்டின் நிர்பந்தத்தினால் தனது உற்பத்தியை மெக்ஸிகோவிற்கும், சீனாவிற்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் மாற்றிவிட்டது. அமெரிக்க (IUE) யூனியனின் கூற்றுப்படி கடந்த ஏழு ஆண்டுகளில் ஜெனரல் எலக்டிரிகல்ஸில் மட்டுமே 1,00,000 தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.
பிளாஸ்டிக் கச்சா பொருள் விலை கடுøமயாக உயரவே, தனது தயாரிப்புகளின் விலையைக் கூட்ட முடிவெடுத்தது அமெரிக்காவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான "ரப்பர் மெய்ட்'. வால்மார்ட் விலையுயர்விற்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரப்பர்மெய்டின் பொருட்களை விற்பதை நிறுத்தியது. அதன் விளவாக ரப்பர்மெய்ட் நிறுவனம் திவாலாகி தனது நிறுவனத்தை போட்டிக் கம்பெனியான நியுவெல்லிடம் விற்றுவிட்டது. இன்று நியூவெல் நிறுவனம் தொடர்ந்து வால்மார்ட்டுடன் வர்த்தகம் செய்வதற்காக தனது 400 ஆலைகளில் 69ஐ மூடிவிட்டு ஆசியாவிற்கு உற்பத்தியை மாற்றியது. இதனால் இந்நிறுவனத்தில் இதுவரை வேலை இழந்தோர் 11,000 பேர்.
இதேபோன்று லீவைஸ், தாம்சன் டி.வி, உள்ளிட்டு விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பலப்பல அமெரிக்க நிறுவனங்களை மூடச்செய்து 15 லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது வால்மார்ட்.
உழைப்புச் சுரண்டல்
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை மடக்கிப் போட்டு வியர்வைக் கடைகள் எனப்படும் கொடூரமான கொத்தடிமைக் கூடாரங்களை வால்மார்ட் இரகசியமாக நடத்துகிறது. சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளிலோ வெளிப்படையாகவே இவை நடத்தப்படுகின்றன. இங்கு ஆணி, பொம்øமகள், மின்விசிறிகள் போன்ற பல்லாயிரம் விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
நாளொன்றுக்கு 13 முதல் 16 மணி நேரம் வேலை, வார விடுமுறை கிடையாது என்று தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படும் இது போன்ற கூடாரங்களில் விழாக்கால, பண்டிகை விற்பனை சீசன்களில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள்.
நினைத்தே பார்க்க முடியாத இந்தக் கொடூர வேலைக்கு மாதச்சம்பளம் 42 டாலர்கள். இது சீனாவின் குறைந்தபட்ச கூலியை விட 40% குறைவு. இந்த தொழிலாளர்கள் 7 அடிக்கு7 அடி அறையில் 12 பேர் அடைக்கப்பட்டு அதற்கு வார வாடகை 2 டாலர்களும், மட்டமான உணவிற்கு வாரத்திற்கு 5.50 டாலர்களும் வசூலிக்கப்படுகிறது. இந்த வேலைக் கொடுøமயினால் அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அது அவர்களுடைய சொந்தச் செலவு. சீனாவில் மட்டும் வால்மார்டிற்கு இது போன்ற 5000 கொத்தடிமைக் கூடாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏழை நாடுகளின் தொழிலாளர்களைப் போலவே தனது சொந்த ஊழியர்களையும் வால்மார்ட் ஒடுக்குகிறது. உலக அளவில் வால்மார்ட்டின் ஊழியர்கள் 15 லட்சம் பேர். ஆனால் எங்குமே பெயருக்குக் கூட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. முன்னர் எந்தக் காலத்திலாவது ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கூட அவருக்கு வால்மார்ட்டில் வேலை வாய்ப்பு இல்லை.
அதே போல எந்தக் கடையிலாவது தொழிற்சங்கம் அமைக்கப்படும் எனச் சந்தேகித்தால் அந்தக்கடை ஊழியர்களை ரகசியக் காமிராக்கள் கொண்டு கண்காணித்து சந்தேகத்திற்கு உரிய நபர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்கிறது. தனது தலைøமயகத்தில் இதற்கென்றே உருவாக்கி வைத்திருக்கும் சிறப்பு தொழிற்சங்க எதிர்ப்புப் படையை வரவழைத்து கருங்காலிகளை உருவாக்கி, சங்கம் அமைக்கும் முயற்சியை முளையிலேயே கிள்ளுகிறது.
தொழிற்சங்கங்கள் இருக்கும் மற்ற நிறுவனங்களின் ஊழியர்களை விட வால்மார்ட் ஊழியர்களின் சம்பளம் 23% குறைவு. வால்மார்ட் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். காப்பீடு செய்யவில்லையென்றால் மருத்துவமே பார்த்துக் கொள்ள முடியாது என்ற நிøலயில் உள்ள அமெரிக்காவில் வெறும் 38% வால்மார்ட் ஊழியர்களுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
சிறப்பு விற்பனை நாட்களில் தனது ஊழியர்களை வெளியில் செல்லக்கூட அனுமதிக்காமல், கடையில் வைத்துப் பூட்டும் வால்மார்ட், கூடுதல் பணி நேரத்திற்கு தொழிலாளிகளுக்கு ஒரு பைசா கூட ஓவர்டைம் வழங்குவதில்லை. பெண் தொழிலாளிகளுக்கு ஆண்களை விட குறைவான சம்பளம், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க மறுப்பது, குழந்தைத் தொழிலாளர் முறை என நீண்டு கொண்டே செல்கின்றன வால்மார்டின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள்.
இந்தக் கொடுமைகளை எதிர்த்து கனடா நாட்டில் வால்மார்டின் இறைச்சிக்கடை ஊழியர்கள், சங்கம் அமைத்தவுடன், அந்நாடு முழுவதுமுள்ள தனது கடைகளில் இறைச்சிப்பகுதியையே இழுத்து மூடி தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுத்தது. தனது தொழிலாளர் விரோத நடவடிக்øககளுக்காக அமெரிக்காவின் 38 மாநிலங்களில் வழக்குகளைச் சந்தித்து வருகிறது வால்மார்ட். இது தவிர அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய வழக்கான 16 லட்சம் முன்னாள், இந்நாள் வால்மார்ட் ஊழியர்கள் இணைந்து தொடுத்துள்ள வழக்கும் அதன்மேல் நிலுøவயில் உள்ளது.
அடுத்த குறி இந்தியா
சமூகச் செல்வங்களான உழைப்பையும், உற்பத்திøயயும் தின்று செரித்து, வேலையின்மை யையும், வறுமைøயயும் எச்சங்களாக விட்டுச் செல்லும் பொருளாதாரப் புற்று நோய் வால்மார்ட். இதன் அடுத்த இலக்கு இந்தியா. சில்லறை வணிகத்தை நம்பி வாழும் 4 கோடி குடும்பங்கள், பல கோடி விவசாயிகள் ஆகியோருடைய வாழ்க்கையையும், 10 லட்சம் கோடி மதிப்பு கொண்ட உலகின் நான்காவது பெரிய சில்லறை விற்பனைச் சந்தையுமான இந்தியாவை விழுங்க பல்லாயிரம் கோடி முதலீட்டுடன், வருகிறது வால்மார்ட்.மலிவு விலையில் கிடைக்கிறது என்பதால் நாம் மரணத்தை வாங்கப் போகிறோமா?
நன்றி : புதிய கலாச்சாரம் , அக்டோபர், 2007

உச்சநீதி மன்றம் அல்ல வேதாந்தி மன்றம்!

உச்சநீதி மன்றம் அல்ல வேதாந்தி மன்றம்!
உச்ச நீதிமன்றம் என்ற பெயரில் கவுரவமாக அழைக்கப்படும் பார்ப்பனக் கட்டைப் பஞ்சாயத்து மன்றம், கடந்த இரண்டு நாட்களாகப் போட்டு வரும் உத்தரவுகளையும் பேசி வரும் பேச்சுக்களையும் கேட்கக் கேட்க இரத்தம் கொதிக்கிறது. சுயமரியாதையற்ற புழுக்களைத் தவிர, வேறு எந்த உயிரினமும் இவற்றைக் கேட்டுக்கொண்டு சகித்திருக்க முடியாது. கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்களைக் கொஞ்சம் மனதில் ஓட விட்டுப் பாருங்கள்.
இராமன் பாலம் என்ற மோசடியைத் திடீரென்று அரங்கேற்றி, சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்கு இடைக்காலத் தடை கோரி சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பனக் குள்ள நரி உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்தது. உடனே, குபீரென்று பார்ப்பனப் புற்றிலிருந்து கிளம்பிய நச்சுப்பாம்புகள் சீறத்தொடங்கின. ஜெயலலிதா, சோ, அத்வானி, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணி, தினமணி, தினமலர் என ஒரு கும்பல் படமெடுத்து ஆடத்தொடங்கியது. அடுத்த கணமே சேது சமுத்திரத் திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.
முடக்கப்பட்ட இத்திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி அக்டோபர் 1ஆம் தேதியன்று தமிழகம் தழுவிய முழு அடைப்பு நடத்த தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் அழைப்பு விட்டன. இராமனைக் கற்பனைக் கதாபாத்திரம் என்று கருணாநிதி கூறிவிட்டதால், நாடெங்கும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் குமுறிக் கொண்டிருப்பதாகக் கூச்சலிட்டது இந்தப் பார்ப்பனக் கும்பல். இராமனுக்கு இத்தகைய பேராதரவு இருக்கும்போது ஏன் கவலைப்படவேண்டும்? தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை இந்துக்களிடம் ""கருணாநிதியின் முழு அடைப்புக்கு ஆதரவு கொடுக்காதீர்கள்'' என்று அறைகூவல் விடுத்திருக்கலாம். அல்லது ""இராமன் பாலத்தைக் காப்பாற்றுவோம்'' என்று தாங்களே ஒரு போராட்டத்தை அறிவித்திருக்கலாம். ஆனால், இந்தப் பார்ப்பன நரிகளுக்கு அதைச் செய்யும் துணிவு இல்லை. ஏனென்றால், இராமனுக்கு ஆதரவாகக் குரைப்பதற்கு தமிழகத்தின் வீதிகளில் ஒரு சொறிநாய் கூடத் தயாராக இல்லை. எனவேதான், இந்தக் குறுக்கு வழி. முழு அடைப்பை எதிர்த்து முதலில் உயர்நீதி மன்றத்தையும் பிறகு உச்சநீதி மன்றத்தையும் அணுகினார் ஜெயலலிதா. அடுத்த கணமே நீதி பேசத்தொடங்கியது.
""1998இல் முழு அடைப்பு சட்டவிரோதம் என்று கேரள உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அதை உச்ச நீதி மன்றமும் உறுதி செய்துள்ளது. இந்த நாட்டில் நீதிமன்றங்களின் உத்தரவுகள் கிள்ளுக் கீரையாகவே மதிக்கப்படுகின்றன. உங்களுடைய எதிர்ப்பு யாருக்கு எதிராக, இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்த உச்சநீதி மன்றத்துக்கு எதிராகவா, மத்திய அரசுக்கு எதிராகவா?''
""பந்த் என்பது சட்டவிரோதம் என்று உச்சநீதி மன்றம் ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. பிறகு அதை நடத்துமாறு தனி நபரோ, அமைப்போ அழைப்பு விடுக்கக் கூடாது. முழு அடைப்பு என்றால் அரசியல் சட்டப்படி அங்கு ஆட்சி நடக்கவில்லை, அரசு சீர்குலைந்து விட்டது என்றே அர்த்தம். எனவே முழு அடைப்பு நடத்தக் கூடாது'' என்று செப்டம்பர் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பி.என். அகர்வால், பி.பி. நவலேகர் என்ற இரு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முழு அடைப்பைக் கைவிடுவதாகவும் உண்ணாவிரதப் போராட்டம் மட்டுமே நடத்த இருப்பதாகவும் அறிவித்தார் கருணாநிதி.
""உண்ணாவிரதப் போராட்டமும் நீதிமன்ற அவமதிப்புதான். அதுவும் நடத்தக்கூடாது'' என்று எகிறினார் ஜெயலலிதா. கோடம்பாக்கம் தொழிலைஅரசியல் அரங்கில் தொடர்வதற்கு வந்திருக்கும் சரத்குமார், விஜயகாந்த் போன்ற கழிசடைகள், உடனே ஜெயலலிதாவுக்கு ஒத்துப்பாடின. ""நீதி மன்றத்துக்கு சவால் விடுவது போல இருக்கிறது முதல்வரின் உண்ணாவிரத அறிவிப்பு. அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட முடியவில்லை என்றால் அவர்கள் ராஜிநாமா செய்து விடுவதுதான் முறை'' என்று தலையங்கம் எழுதியது ஆர்.எஸ்.எஸ் ஸின் அதிகாரபூர்வமற்ற நாளேடான தினமணி.
""கடை அடைப்புக்கும் வேலை நிறுத்தத்திற்கும் ஆதரவு தர வேண்டாம்'' என்று இந்தப் பார்ப்பனக் கும்பல் மக்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கலாம். ராமன் படத்தைத் தூக்கிக் கொண்டு தெருத்தெருவாக பஜனை பாடி இராமன் பாலத்துக்கு ஆதரவாகப் பக்தர்களைத் திரட்டியிருக்கலாம். ஆனால், இவை எதையும் செய்யும் தைரியமோ யோக்கியதையோ பார்ப்பனக் கும்பலுக்கு இல்லை. அதற்கு வால் பிடிக்கும் சுயமரியாதையற்ற கழிசடைகளுக்கும் இல்லை.
பார்ப்பனக் கும்பலின் அரட்டல்களுக்கு அஞ்சாமல் உண்ணாவிரதம் நடந்தது. கூட்டணிக் கட்சிகள் வேண்டுகோளின் படியும், அவர்களுடைய தொழிற்சங்கங்கள் விடுத்திருந்த அறைகூவலின் அடிப்படையிலும் பொது வேலைநிறுத்தமும் கடை அடைப்பும் வெற்றிகரமாக நடக்கத் தொடங்கின. உடனே, அக்டோபர் 1ஆம்தேதி காலையே மீண்டும் உச்சநீதி மன்றத்துக்குப் போனார் ஜெயலலிதா.""உங்கள் உத்தரவு மீறப்படுகிறது'' என்று அங்கே முறையிட்டார். அதனைக் கேட்ட மறு கணமே நீதிதேவதை சாமியாடத் தொடங்கி விட்டது.
""நீங்கள் சொல்வது உண்மையானால் அங்கே அரசமைப்பு எந்திரம் சீர்குலைந்து விட்டதாகத்தான் அர்த்தம். அங்கே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு நாங்கள் உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும்... நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருங்கள். தலைமைச் செயலரையும் முதல்வரையும் எங்கள் முன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பவும் நாங்கள் தயங்கமாட்டோம்'' என்று சீறினார் நீதிபதி அகர்வால். ""எங்கள் உத்தரவுக்கு தவறான அர்த்தம் கற்பிக்காதீர்கள். எச்சரிக்கை! நெருப்புடன் விளையாடாதீர்கள்'' என்று தி.மு.க. அரசை எச்சரித்தார்.
எவ்வளவு திமிர்? எத்தனை ஆணவம்? பிரெஞ்சுப் புரட்சி தொடங்குவதற்கு முன்னால் ""அரசா...? நான் தான் அரசு'' என்று ஆணவமாகப் பேசினான் பிரெஞ்சு மன்னன் பதினான்காம் லூயி. அந்தத் திமிர் பிடித்த மன்னனின் தலையைப் பத்தோடு பதினொன்றாக இழுத்து வைத்து கில்லெட்டினில் வெட்டி எறிந்தார்கள் பிரெஞ்சு மக்கள். அதற்குச் சற்றும் குறைவில்லாத ஆணவமும் திமிரும் நீதிபதி அகர்வாலின் பேச்சில் நிரம்பி வழிகிறது. ஏதோ தமிழ்நாடே பற்றி எரிவதைப் போலவும், தெருவுக்குப் பத்து கொலை நடப்பதைப் போலவும், அரசாங்கம் அதைப் பார்த்துக் கொண்டு நிற்பதைப் போலவும் குமுறி வெடிக்கிறார் நீதிபதி.
ஒரு பொது வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்ததைக் கண்டு நீதிபதிக்கு ஏன் அத்தனை அடக்கவொண்ணாத ஆத்திரம்? அவர்களுடைய உத்தரவு மதிக்கப்படவில்லை என்பதனாலா? எப்போதுமே""எங்களுடைய உத்தரவை யாரும் மதிப்பதில்லை'' என்று அகர்வால் ஒப்புக் கொள்கிறார். அப்போதெல்லாம் வராத ஆத்திரம் இப்போது மட்டும் வருவது ஏன்?
அதுதான் அவாள் நெஞ்சில் புகைந்து கொண்டிருக்கும் பார்ப்பன வெறி. எந்த இராமனை இவர்கள் தேசிய நாயகனாகவும், தேசிய தெய்வமாகவும் கொண்டாடுகிறார்களோ, எந்த இராமனின் பேரை மட்டுமே மூலதனமாக வைத்து பாரதிய ஜனதா என்ற கட்சி மைய அரசையே கைப்பற்ற முடிந்ததோ, எந்த இராமனையும் பார்ப்பன புராண இதிகாசங்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போற்றிக் கொண்டாடுகிறார்களோ, எந்த இராமனின் பெயரால் சேது சமுத்திரத் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறதோ, அந்த இராமனுக்குத் தமிழகத்தில் கால்காசுக்கு மதிப்பில்லை. அந்த இராமனை ஏளனம் செய்தால் தமிழ் மக்கள் ரசித்துச் சிரிக்கிறார்களேயன்றி, யாரும் கோபத்தில் வெடிக்கவில்லை. நீதிபதியின் ஆத்திரம் கருணாநிதி அரசின் மீது அல்ல, தமிழக மக்களின் மீது.
""தனிப்பட்ட கட்சிகளின் உரிமையை விட பொதுமக்களின் உரிமை மேலானது. எல்லாவற்றையும் நிறுத்துவதன் மூலம் உங்கள் ஒற்றுமையையும் வலிமையையும் காட்டுவதுதான் உங்கள் நோக்கம்'' என்கிறார் நீதிபதி. வேலைக்குப் போக முடியவில்லையே, கடைக்குப் போய் சாமான் வாங்க முடியவில்லையே, கோர்ட்டுக்குப் போய் நீதி வாங்க முடியவில்லையே என்று தமிழ் மக்கள் யாரும் ஆற்றொணாத் துயரால் அழுது புலம்பவில்லை. பொது மக்களின் மேலான உரிமையை மதிக்கும் விதத்தில் அவர்களை வாய்தா போட்டே கொல்லும் நீதிமன்றங்களை மக்கள் அறிவார்கள். காலை 11 மணிக்கு வந்து அமர்ந்து மதியம் 2 மணிக்கு கேட்பாரின்றி எழுந்து செல்லும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வலிமையையோ நாடே அறியும்.
பேருந்துப் படிகளில் காலே வைக்காத, டீக்கடைகளில் டீ குடிக்காத, ஜெயலலிதாவும், சோவும், சுப்பிரமணிய சாமியும், இராம. கோபாலனும்தான் நீதிபதிகளைப் பொறுத்தவரை தமிழக மக்கள். அவாள் பதறினால் இவாளுக்குத் தசையாடுகிறது. பார்ப்பனப் பாசிசக் கும்பலுக்கு எதிரான தமிழ் மக்களின் அலட்சியத்தையும் வெறுப்பையும் பளிச்செனக் காட்டிய இந்தப் பொது வேலை நிறுத்தத்தின் நோக்கம்தான் நீதிமன்றத்தின் பிடறியைச் சூடேறச் செய்கிறது.
ஜெயலலிதாவின் வக்கீல் ""அங்கே பந்த் நடக்கிறது'' என்று சொன்னால் ""அப்படியா, விவரங்களை ஒரு மனுவாகத் தாக்கல் செய்'' என்று கூறவேண்டும். அந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசு தரப்புக்கு நோட்டீஸ் தரவேண்டும். அதன் பிறகு விவாதம். அதற்கப்புறம் தான் தீர்ப்பு. ஆனால் பந்த் நடக்கிறது என்ற ஒரு வார்த்தையைக் கேட்டவுடனேயே ""நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரை செய்வோம், கருணாநிதியைக் கோர்ட்டில் நிற்க வைப்போம்'' என்று வெடிக்கிறார் அகர்வால். ஒரு நீதிபதியின் நடுநிலையைப் புரிந்து கொள்ள இதற்கு மேல் வேறென்ன ஆதாரம் வேண்டும்? இது பேசி வைத்துக் கொண்டு நடத்தும் நாடகம் அல்லாமல் வேறு என்ன? அரசை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரத்துடன் ஜெயலலிதாவை முதல்வராகவும் அத்வானியைப் பிரதமராகவும் நியமிக்கும் அதிகாரமும் அகர்வாலுக்கு வழங்கப்பட்டால்தான் இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முடியும் போலிருக்கிறது!
"பந்த்' நடத்தக்கூடாது என்று உச்சநீதி மன்றம் தடை விதித்த பின் வேறு எந்த மாநிலத்திலும் பந்த் நடக்கவில்லையா? எத்தனை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது? தமிழகத்தின் மீது மட்டும் ஏன் இத்தனை காழ்ப்பு? ஒரு மாத காலம் குஜராத் பற்றி எரிந்ததே, 2000 முஸ்லீம்கள் பட்டப்பகலில் நட்டநடுவீதியில் கொலை செய்யப்பட்டார்களே, இலட்சக்கணக்கான மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு அகதி முகாமில் தங்கியிருந்தார்களே, அத்தனையும் தொலைக்காட்சிகளின் அன்றாடம் வெளிவந்து உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதே, அப்போது எங்கே போயிருந்தது இந்த உச்ச நீதி மன்றம்? மோடி அரசை டிஸ்மிஸ் செய்வோம் என்று ஒரு பேச்சுக்காவது நீதிமன்றம் சொல்லியிருக்கிறதா? அங்கே அரசமைப்பு எந்திரம் சீர்குலையவில்லையா? அல்லது 1992இல் அயோத்தியில் பாரதிய ஜனதா நடத்திய கடப்பாரை சேவைக்கு அனுமதி அளித்ததே உச்சநீதி மன்றம், பாபர் மசூதி இடிக்கப்பட்டு நாடே இரத்த வெள்ளத்தில் மிதந்தபோது, நீதிபதிகள் எதில் மிதந்து கொண்டிருந்தார்கள்?
""நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அங்கே அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து விட்டதாகத்தான் அர்த்தம்'' என்று வெடிக்கிறார் நீதிபதி. அப்படி ஜெயலலிதாவின் வக்கீல் என்னதான் சொன்னார். குஜராத்தையும் மும்பையையும் போல நாடெங்கும் இரத்த ஆறு ஓடியதா, கடைகள் சூறையாடப்பட்டனவா, கும்பல் கும்பலாகப் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்களா? இவையனைத்தையும் போலீசே முன்நின்று நடத்தியதா? அல்லது சட்டீஸ்கரைப் போல சட்டவிரோதமாக சல்வா ஜுடும் என்ற கூலிப்படையை அரசாங்கமே உருவாக்கி, அவர்கள் கையில் துப்பாக்கியைக் கொடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியை அரசு அவர்களிடம் ஒப்படைத்ததா? இப்படி ஏதாவது நடந்திருந்தால் அவற்றையெல்லாம் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கையாகவே உச்ச நீதிமன்றம் கருதியிருக்கும்.
இங்கோ தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுடைய தொழிற்சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தத்தின் காரணமாகப் பேருந்துகள் ஓடவில்லை. அரசுத்துறைகள் இயங்கவில்லை. போலீசையும் இராணுவத்தையும் வைத்து அவர்களை "அடித்து உள்ளே தள்ளாமல்' அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இதைத்தான் ""அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து விட்டது'' என்று கூறுகிறது நீதிமன்றம். மாட்சிமை தங்கிய நீதிபதிகள் அரசியல் வேலை நிறுத்தம் கூடாது என்று உத்தரவிட்டால் உடனே அரசியல் கட்சிகள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட வேண்டும். ""வேலைக்குப் போ'' என்று சொன்னால் உடனே தொழிலாளர்கள் வேலைக்குப் போகவேண்டும். ""கடையைத் திற'' என்றால் வணிகர்கள் திறக்க வேண்டும். ""கடைக்குப் போய் காப்பி குடி'' என்று உத்தரவிட்டால் நாம் குடிக்க வேண்டும், நாம் குடிக்க மறுத்தால் போலீசை வைத்து அரசு நம்மைக் குடிக்க வைக்க வேண்டும். தவறினால் தமிழகத்தில் அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து விட்டதாகவே நீதிமன்றம் கருதும். சட்டமன்ற அவைத்தலைவரின் வானளாவிய அதிகாரம் குறித்த பி.எச்.பாண்டியனின் பிரகடனத்தை நெடுநாட்களுக்கு முன் தமிழகம் கேட்டிருக்கிறது. இந்த உச்ச நீதிமன்றப் பாண்டியர்களின் அதிகாரச் சாட்டையிலிருந்து நம் வீட்டின் கழிப்பறையும் படுக்கையறையும் கூடத் தப்ப முடியாது போலிருக்கிறதே!
""மை லார்ட், நான் என்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் தான் இன்று பேருந்தை ஓட்டவில்லை'' என்று ஒரு ராமசாமி, மாட்சிமை தங்கிய உச்ச நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க விரும்பினால், அவர் என்ன செய்ய வேண்டும்?
ராம் ஜெத்மலானியையோ, சாந்தி பூஷணையோ வக்கீலாக அமர்த்திக் கொள்ள வேண்டுமா? ராமசாமியை அடித்து வேலைக்கு இழுத்து வருவதற்கு காவல்துறை என்ன முயற்சிகளை மேற்கொண்டது என்ற விவரங்களை மாநகரக் காவல்துறை ஆணையர் மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டுமா? இந்த இராமனுக்கும் அவன் கட்டிய பாலத்துக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கு மகா கனம் பொருந்திய ""சோ'' ராமஸ்வாமி அய்யர்வாளைத் தவிர வேறு அய்யர்வாள் யாரையும் திருவல்லிக்கேணியிலோ, மடிப்பாக்கத்திலோ, மயிலாப்பூரிலோ கூடத் தேடிப்பிடிப்பது துர்பலம் என்ற உண்மையை "ஹிஸ் ஹைனஸ் அகர்வால்'வாளுக்கு எப்படிப் புரிய வைப்பது?
""உங்களுடைய எதிர்ப்பு யாருக்கு எதிராக, இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவா?'' என்று தமிழக அரசின் வக்கீலைக் மடக்குகிறார் நீதிபதி. தட்டிக் கேட்க ஆளில்லைன்னா தம்பி சண்டப் பிரசண்டன் தான்! உச்ச நீதிமன்றத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அரசமைப்புச் சட்ட நெறியின் காரணமாக தி.மு.க. வேண்டுமானால் வாயை மூடிக்கொண்டிருக்கலாம். நாம் கேட்கிறோம், ""யாருக்கு எதிராக என்று இடிமுழக்கம் செய்யும் பிரம்மஸ்ரீ சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜிகளே, சேது சமுத்திரத் திட்டத்துக்கு நீங்கள் விதித்த தடை யாருக்கு ஆதரவாக, உங்கள் இரத்த உறவான பார்ப்பனக் கும்பலுக்கு ஆதரவாகவா?''
"இல்லை' என்று யோக்கியன் எவனாவது சொல்ல முடியுமா? தொல்லியல் துறையின் அறிவியல் ஆய்வுகளைத் தூக்கி வீசிவிட்டு, சுப்பிரமணிய சாமி கொடுத்த வால்மீகி இராமாயணத்தையும், துளசி தாஸ் இராமாயணத்தையும் ஆதாரமாகக் கொண்டு ""இராமர் பாலத்தைப் பாதுகாப்பதற்காக'' இடைக்காலத் தடை கொடுத்திருக்கிறதே ஒரு நீதிமன்றம், இது உலகத்தில் எங்காவது நடக்குமா? மனுநீதி கோலாச்சிய மன்னராட்சியில் தவிர வேறு எங்காவது இப்படி ஒரு தீர்ப்பை எழுத முடியுமா? அந்த இராமனால் கொலை செய்யப்பட்ட சம்புகன் என்ற சூத்திரனின் வரலாறுக்கு வால்மீகி இராமாயணத்திலேயே ஆதாரம் இருக்கிறது. உச்சநீதி மன்றத்துக்குக் கீழேதான் சம்புகன் புதைக்கப் பட்டிருக்கிறான் என்று நாங்கள் வழக்கு தொடுக்கிறோம். நீதி மன்றத்தை இடித்து விட்டு அகழ்வாராய்ச்சி நடத்தத் தயாரா? பாபர் மசூதிக்குக் கீழே ராமன் கோயில் இருக்கிறதா என்று அகழ்வாராய்ச்சி செய்து பார்க்க அலகாபாத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதே, அதே போல ஒரு உத்தரவு எங்களுக்குக் கிடைக்குமா? அல்லது அவாளுக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் உத்தரவாகுமா?
2001இல் தொடங்கி பாரதிய ஜனதா நடத்திய எந்த ஆய்வின் போதும் அவர்களின் கண்ணில் இராமன் பாலம் தட்டுப்படவில்லை. ஜெயலலிதாவின் 2004 தேர்தல் அறிக்கையிலும் ஆதாம் பாலம்தான் இருக்கிறது. திடீரென்று அந்தப் பாலம் மதம் மாறி இராமன் பாலமானது எப்படி? கருணாநிதி திரும்பத் திரும்ப இந்தக் கேள்வியை எழுப்பிய போதும், அதற்குத் தினமணி உள்ளிட்ட எந்தப் பார்ப்பன மணியும் பதிலளிக்காமல் வழுக்கிச் செல்வதைப் பார்ப்பன வித்தகம் என்பதா, கயமை என்பதா? எப்படிச் சொன்னால் அவாளின் மத உணர்வுக்கு பங்கம் நேராமல் இருக்கும்? 2500 கோடி ரூபாயைக் கடலில் கொட்டிய பிறகு, திடீரென்று இப்போது இராமன் பாலம் என்கிறீர்களே, இத்தனை நாளும் இதனை ஏன் எழுப்பவில்லை என்றொரு கேள்வியை சுப்பிரமணிய சாமியிடம் உச்சநீதி மன்றம் கேட்கவில்லையே, இந்த ஞாபக மறதியை குற்றவியல் சட்ட மொழியில் எப்படிக் கூறலாம்? இதனை கிரிமினல் நெக்லிஜன்ஸ் (குற்றமுறு அலட்சியம்) என்பதா அல்லது பார்ப்பனக் கும்பலுடன் நீதிமன்றம் சேர்ந்து நடத்திய கிரிமினல் கான்ஸ்பைரசி (குற்றமுறு சதி) என்பதா?
""தனிப்பட்ட கட்சியின் நலனை விட பொதுமக்களின் நலன்'' மேலானதாம்! அடடா, எப்பேர்ப்பட்ட தத்துவம்! அத்வானி நடத்திய இரத்த யாத்திரையின் போது அவரிடமல்லவா இதைச் சொல்லியிருக்க வேண்டும்? ஒருவேளை, அத்வானியைப்போல செலக்டிவ் அம்னீசியா நோயினால் உச்சநீதி மன்றமும் பீடிக்கப் பட்டிருந்தது போலும்! "பொது மக்களின் நலன்'பற்றி உச்சநீதி மன்றம் பேசும் போது நமக்குப் புல்லரிக்கிறது. மாடர்ன் பிரட், பால்கோ, விமான நிலையங்கள், தொலைபேசித்துறை, எண்ணெய் வயல்கள், சுரங்கங்கள் என்று பொதுச் சொத்துக்களை தனிப்பட்ட முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் இந்த அரசாங்கம் அள்ளிக் கொடுத்தபோது, அவற்றுக்கு எதிராக எத்தனை பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன! அவற்றையெல்லாம் உச்சநீதி மன்றம் ஏன் தள்ளுபடி செய்தது? ஒருவேளை ""தனிப்பட்ட சில தொழிலாளர்களின் நலனைக்காட்டிலும் உலகத்துக்கே பொதுவான பன்னாட்டு முதலாளிகளின் நலன் மேலானது'' என்று நீதிமன்றம் கருதியிருக்கக் கூடும்!
""இந்த நாட்டில் நீதிமன்றங்களின் உத்தரவுகள் கிள்ளுக் கீரையாகவே மதிக்கப்படுகின்றன'' என்று மனம் வெதும்புகிறார்கள் நீதிபதிகள். நர்மதை அணைக்கட்டுத் திட்டத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிவாரணத்தைக் கூடத் தராமல் 2 இலட்சம் பழங்குடி மக்களை அவர்களுடைய வீடுகள், கோயில்கள், நிலங்களுடன் தண்ணீரில் அமிழ்த்தினார் நரேந்திர மோடி. அப்போது நீதியை நிலைநாட்டும் இந்தக் கரிசனை நீதிபதிகளுக்கு வரவில்லையே! ""ஐயா உங்கள் உத்தரவை அரசு நிறைவேற்ற மறுக்கிறது'' என்று மேதா பட்கர் தாக்கல் செய்த மனுவை, ""நிர்வாகத்துல இதெல்லாம் சகஜமம்மா'' என்று கூறித் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். அந்தத் தீர்ப்பை விமரிசித்த அருந்ததி ராயை நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக உள்ளே தள்ளியது.
ஒருவேளை இராமாயணம், மகாபாரதம் போன்ற புளுகு மூட்டைகள் எதையாவது மேதா பட்கர் ஆதாரமாகத் தாக்கல் செய்திருந்தால் நீதி கிடைத்திருக்குமோ? அப்படியே செய்திருந்தாலும் பழங்குடி மக்களைப் பார்ப்பன மக்களாக்கியிருக்க முடியாதே! பழங்குடி மக்கள் என்றாலே கிள்ளுக் கீரைகள்தான் என்பதால், அவர்கள் தொடர்பான அந்த உத்தரவும் கிள்ளுக் கீரையாக மதிக்கப்பட்டதில் நீதிபதிகளுக்கு இயல்பானதாக இருந்திருக்கும். எப்படிப் பார்த்தாலும் இராமன் பாலம் என்னும் மணல் திட்டைப் போல 2 இலட்சம் பழங்குடிகளின் நிலமும் கோயில்களும் எப்படிப் புனிதமானதாக ஆக முடியும்?
உச்சநீதி மன்றத்தின் முல்லைப் பெரியார் தீர்ப்பைக் கேரள அரசும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைக் கர்நாடக அரசும் கிள்ளுக்கீரையாகக் கருதவில்லை என்பதென்னவோ உண்மைதான். அவற்றை மலம் துடைத்த காகிதமாகக் கருதி நீதிபதிகளின் முகத்தில் எறிந்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒருவேளை நீதிபதிகளின் நாசித்துவாரத்தில் அந்த மணம் ஏறவில்லையோ! அல்லது மேட்டூர், முல்லைப்பெரியார் அணைகள் தொடர்பாக புராண இதிகாச ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதுதான் தமிழகம் இழைத்த குற்றமோ!
""ஐயா, உங்கள் உத்தரவை கருணாநிதி அரசு அவமதிக்கிறது!'' என்று அம்மாவின் வக்கீல் சொல்லி முடிப்பதற்குள், நீதிபதிகளுக்கு ரவுத்திரம் தலைக்கேறுகிறது. ""அப்படியா, கூப்பிடு கருணாநிதியை!'' என்று உறுமுகிறார்கள். அம்மாவுடன் ஒப்பிடும் அளவுக்கு வேறு யாராவது நீதித்துறையை அவமதித்திருக்கிறார்களா? சென்னை உயர்நீதி மன்றத்தில் அம்மண டான்ஸ், நீதிபதியின் மருமகன் மேல் கஞ்சா கேஸ், வேறொரு நீதிபதிக்கு சூட்கேஸ், ஸ்டெச்சரில் சகோதரிகளின் நீதிமன்ற விஜயம், அய்யோ என் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று ஒரு நீதிபதியின் அலறல்.. இவையெதுவும் எந்த நீதிபதிக்கும் அவமதிப்பாகவேபடவில்லை. பிள்ளை நெஞ்சில் உதைத்தால் தாய்க்கு அவமதிப்பா என்ன? நீதிபதிகளை ஜெயலலிதா நோட்டால் அடிக்கலாம் அல்லது ஜோட்டாலும் அடிக்கலாம். அதைச் சகித்துக் கொள்வார்கள். ஆனால் "உண்மை' என்று அழைக்கப்படும் பொருளால் அடிக்கப்படும்போது மட்டும் அதனை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
இன்று அவமதிப்பால் குமுறும் அகர்வாலுக்கு முன்னதாக வேறொரு "வால்' உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். அவர் பெயர் சபர்வால். தன்னுடைய பிள்ளைகள் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டுவதற்காக டெல்லி நகரத்தின் சிறுவணிகர்கள் ஆயிரக்கணக்கானோர் கடையைக் காலி செய்ய வேண்டும் என்றார் அந்த வால். அதிகாரம் இல்லாதவன்தானே அடியாள் வைத்து காலி செய்யவேண்டும். அப்பாவைத் தலைமை நீதிபதியாகப் பெற்றிருக்கும் மகனுக்கு போலீசும் இராணுவமும்தான் அடியாட்கள். சிறுவியாபாரிகளை அடித்தே விரட்டினார் சபர்வால். சபர்வால் ஓய்வு பெற்ற பின்னர் சமீபத்தில் இந்த அயோக்கியத்தனத்தை ஆதாரங்களுடன் வெளியிட்டது "மிட்டே' என்ற பத்திரிகை. உடனே அந்தப் பத்திரிகை ஆசிரியரையும் பத்திரிகையாளர்களையும் "நீதிமன்றஅவமதிப்பு' குற்றத்துக்காக உள்ளே தள்ளிவிட்டது டெல்லி உயர்நீதி மன்றம். நீதிபதி ஓய்வு பெற்றாலும் அவரது மதிப்பு ஓய்வு பெறுவதில்லையே!
"உண்மை'என்ற ஒன்றைத் தவிர வேறு எதையும் நீதிபதிகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடிய அவமதிப்பாகக் கருதுவதில்லை. உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகள் மீது நீங்கள் யாராவது குற்றம் சாட்ட எண்ணினால் உங்களிடம் போதிய ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. அந்த ஆதாரங்களை வெளியிட்டால் அடுத்த கணமே நீதிமன்ற அவமதிப்புக்காக நீங்கள் உள்ளே போக வேண்டும். இது இரண்டாவது நிபந்தனை. அதாவது, குற்றம் சாட்டுபவன்தான் முதல் குற்றவாளி. சரி, அப்புறமாவது நீதிபதிகள் அந்தக் குற்றச்சாட்டை விசாரிப்பார்களா என்றால், அதுவும் கிடையாது. அதையெல்லாம் விசாரிக்கத் தொடங்கினால், நீதிமன்றத்தை அப்புறம் யார் மதிப்பார்கள்? ஆய்வு, விசாரணை எல்லாம் எப்போதுமே அவாளுக்குக் கிடையாது. "நீதிபதிகள் குற்றமற்ற சொக்கத்தங்கங்கள்' என்று நாம் நம்பித்தான் ஆக வேண்டும். பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்பதைப்போல! அணிலையும் குரங்கையும் வைத்து இராமன் பாலம் கட்டினான் என்பதைப்போல! நம்ப மறுத்தால் நீங்கள் மதத்தை அவமதித்த குற்றத்துக்கு ஆளாவீர்கள் அல்லது நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்கு ஆளாவீர்கள்.
""பந்த் என்பது சட்டவிரோதம் என்று அறிவித்த பிறகு அதை நடத்துமாறு ஒரு தனிநபரோ, கட்சியோ எப்படி அழைப்பு விடலாம்?'' என்று கேட்கிறது நீதிமன்றம்.""மனுநீதியின் படி தன்னுடைய இராஜ்ஜியத்தில் சூத்திரன் தவமிருப்பது சட்டவிரோதம்'' என்று இராமன் அறிவித்திருந்தான். அந்தத் தடையை மீறி சம்புகன் என்ற சூத்திரன் தவமிருந்தான். இராம ராஜ்ஜியத்தில் நடந்துவிட்ட இந்த "அதருமத்தின்' விளைவாக ஒரு பார்ப்பானின் மகன் செத்துப்போனானாம். உடனே, சூத்திரன் சம்புகனின் தலையைச் சீவி தருமத்தை நிலைநாட்டினானாம் இராமன். பார்ப்பானின் பிள்ளையும் உடனே உயிர்த்தெழுந்தானாம். இதை விவரிக்கிறது,வால்மீகி இராமாயணம்.
"சட்டவிரோதம்' என்று உச்சநீதி மன்றம் சொன்ன பிறகும் இராமனுக்கு எதிராகத் தமிழகத்தில் முழு அடைப்பு நடக்கிறது. உடனே ஒரு பாப்பாத்தி கூச்சலிடுகிறார். அது மட்டுமல்ல, பார்ப்பன பாசிசக் கும்பலின் மரண ஓலமே நீதிமன்றத்தின் செவிப்பறையைக் கிழிக்கிறது. இத்தகைய அதருமத்தை உச்சநீதி மன்றத்தால் எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்? ""டிஸ்மிஸ் செய்'' என்று ஆணையிடுகிறார் அகர்வால். "தலையைச் சீவு' என்கிறான்----வேதாந்தி. இராமாயணம் கற்பனைக் கதை என்று யார் சொன்னது?

நன்றி :
http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/Book_puja/01.html

Six C's of Character - Yasir Fazaga